பள்ளியில் பூக்கோல போட்டி; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்
பந்தலுார் : பந்தலுார் அருகே, மராடி அரசு பள்ளி மாணவர்களுக்கு பூக்கோல போட்டி நடந்தது.கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கேரளா மற்றும் தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எளிமையாக நடந்து வருகிறது.அதில், தமிழக-- கேரளா எல்லையோர பகுதியாக உள்ள, பந்தலுார் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில், பெரிய ஆரவாரங்கள் இன்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எருமாடு அருகே மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் அஷ்ரப், பள்ளி மேலாண்மை குழு தலைவி அஷ்பினா, உறுப்பினர் ஜோலி, பி.டி.ஏ. தலைவர் சவுக்கத் ஆகியோர் தலைமையில், மாணவர்களுக்கு பூக்கோல போட்டி நடத்தப்பட்டது.போட்டியில், பழங்குடியின மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவ, மாணவியரும் இணைந்து பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் கூறப்பட்டு, ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.