20ம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் 15க்குள் குறைகளை அனுப்பலாம்
ஊட்டி;'ஊட்டியில் இம்மாதம், 20ம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவதால், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை செப்., 15க்குள் அனுப்ப வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:இம்மாதம், 20ம் தேதி காலை, 11:30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அந்த கோரிக்கைகளை இம்மாதம், 15ம் தேதிக்குள், தோட்டக்கலை இணை இயக்குனர் தபால்பெட்டி எண் - 72, ஊட்டி - 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபால் அல்லது நேரடியாக, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், கலெக்டர் மற்றும் இம்மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்பதால் விவசாயிகள், விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலெக்டரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.