மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
10 hour(s) ago
கூடலூர்;கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு வைத்துள்ள தேயிலை, காபி, குறுமிளகு நாற்றுகளை பெற்று பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடலுார், நாடுகாணி பொன்னுார் தோட்டகலை பண்ணையில் ஆண்டுதோறும் தேயிலை, காபி, பட்டர்புரூட், குறுமிளகு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.நடப்பாண்டு, தேயிலை, காபி, பட்டர்புரூட், குறுமிளகு, கிராம்பு, சர்வசுகந்தி, சில்வர் ஓக், தவசி கீரை, சக்கர துளசி, அலங்கார செடிகள், வேளாண் இடுபொருட்கள், உயிர் உரங்கள், உற்பத்தி செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பருவமழை பெய்து வருவதால், நாற்று நடவு செய்ய ஏற்ற காலமாக உள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள விவசாய பயிர் செடிகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. நேரில் வந்து தங்களுக்கு தேவையான, நாற்றுகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெறலாம்,' என்றனர்.
10 hour(s) ago