மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
3 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
3 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
3 hour(s) ago
பெ.நா.பாளையம்: பயிறு வகைகளில் விதைகளை கடினப்படுத்துதல் வாயிலாக, அவற்றை வறட்சியை தாங்கி வளர செய்ய முடியும் என, வேளாண் துறையினர், விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.தற்போதைய கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களான பயிறு வகைகளை, விவசாயிகள் சாகுபடி செய்யும் போது, வறட்சியை தாங்கி வளர, விதைகளை கடினப்படுத்தி விதைப்பதால், விதைகள் வேகமாக முளைத்து, ஆரம்ப காலத்தில் வறட்சியை தாங்கி வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கும்.100 மி.கி., ஜிங் சல்பேட் உப்பை சுமார் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, கரைசல் தயாரிக்க வேண்டும். பின்பு அதில், 350 மி.லி., கரைசலை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கிலோ விதையை கலந்து சுமார், 3 மணி நேரம் ஊற வைத்து, பின்பு நிழலில் உலர்த்த வேண்டும்.பழைய ஈரப்பதத்திற்கு விதையை உலர்த்தி, விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இதேபோன்று பாசி பயிருக்கு, 100 மி.கி., மாங்கனிஷ் சல்பேட் உப்பினால் ஆன கரைசலில் விதைகளை, மேற்கூறியது போல மூன்று மணி நேரம் ஊறவைத்து பின்பு நிழலில் பழைய ஈர பதத்திற்கு உலர்த்தி, விதைகளை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு, 300 மி.கி., ஜிங்க் சல்பேட், 300 மி.கி., சல்பேட் எடுத்து, 3 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறையினர் குறிப்பிட்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago