உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனைவி கழுத்தை அறுத்த கணவர் கைது

மனைவி கழுத்தை அறுத்த கணவர் கைது

பந்தலூர்:நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகுமார், 39, மனைவி ஷோபனா, 29, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் ஏலமன்னாவில் உள்ள தாய் வீட்டுக்கு ஷோபனா சென்றார். நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற பாலகுமார் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஷோபனா மறுக்கவே மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால், ஷோபனாவின் கழுத்தை அறுத்துள்ளார். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் ஷோபனாசிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாலகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ