மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
ஊட்டி;'நீலகிரி லோக்சபா தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா கூறியதாவது:என்னை எம்.பி.,யாக தேர்வு செய்த தொகுதி மக்களுக்காக, மேட்டுப்பாளையத்தில், 22 கோடி ரூபாயில் விளாளத்துார் குடிநீர் திட்டம்; 39 கோடி ரூபாயில் அவிநாசி திருமுருகன்பூண்டியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக புதிய டைடல் பார்க்; சத்தியமங்கலம் தாளவாடியில் பழங்குடி மாணவர்களுக்காக புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 12.46 கோடி ரூபாயில் கொண்டு வரப்பட்டது. நீலகிரி டான் டீ தொழிலாளர்களுக்கு, 454 ரூபாய் ஊதிய உயர்வு மற்றும் விலை இல்லா வீடுகள் ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் மக்களின் வசதிக்காக புதிய பஸ் நிலையம், 8.63 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. 4.58 கோடி ரூபாயில் அவிநாசி அரசு மருத்துவமனையில் புதிய மகப்பேறு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், 85 கோடி ரூபாய் மதிப்பில், புஞ்சை புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது தவிர, அன்னுார் தனி தாலுகாவாக அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டது. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் பக்தர்களுக்காக புதிய பேருந்து நிழற்குடை, பழங்குடி சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் மூலம், வன உரிமை பட்டா மற்றும் சாலை வசதிகள் பெற்றுத்தந்தது உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றால் பலவேறு திட்டங்களை செயல்படுத்துவேன். இவ்வாறு, ராஜா கூறினார்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025