மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
18 hour(s) ago
குன்னுார்;குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை கேட் தாண்டி சென்றுள்ளது. மேலும், பள்ளி அருகே இரு இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரிய வந்தது. இதனால், பெற்றோர், தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.இதேபோல, கரிமொரா ஹட்டி கிராமத்தில் பகல் நேரங்களில் தேயிலை தோட்டம், கோவில் பகுதிகளில் சிறுத்தை உலா வந்தது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உணவு உட்கொண்டிருந்த போது பார்த்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தைகள் நள்ளிரவில் நாய், ஆடு மாடுகளை வேட்டையாட வருவதால். நாய்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
18 hour(s) ago