மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:ஊட்டி மார்க்கெட்டில் தேங்கிய குப்பைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு அகற்றப்படாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். ஊட்டி மார்க்கெட்டில் மட்டும் தினமும் சராசரியாக, 5 டன் அளவுக்கு குப்பை சேகரமாகிறது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் தீட்டுக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. நேற்று அளவுக்கு அதிகமான குப்பை சேர்ந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அகற்றாததால், காய்கறிகளை மண்டிக்கு கொண்டுவரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மண்டி வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் தாமதம் ஏற்பட்டது.தொடர்ந்து, போராட்டம் நடத்த மார்க்கெட் மண்டி வியாபாரிகள் தயாரான நிலையில் நண்பகல், 12:00 மணியளவில குப்பைகள் அகற்றப்பட்டன.வியாபாரிகள் கூறுகையில்,' கோடை சீசனில் அதிக குப்பைகள் தேங்குவதால், கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமித்து அவ்வப்போது குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
03-Oct-2025