உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்றோர கடைகளை அகற்றும் பணி தீவிரம்

ஆற்றோர கடைகளை அகற்றும் பணி தீவிரம்

குன்னுார் : 'குன்னுாரில் பேரிடர் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆற்றோர கடைகள் காலி செய்யப்பட்டு வரும் நிலையில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, 2019ல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அப்போது, ஆற்றோர ஆக்கிரமிப்பில் இருந்த, 73 கடைகளில் முதற்கட்டமாக, 44 கடைகள் மட்டும் அகற்றப்பட்டன. சிலர் தடை ஆணை பெற்றதால் மற்ற கடைகள் இடிப்பது கிடப்பில் போடப்பட்டது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் எதிரே, 7 கடைகளை இடிக்க வருவாய் துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. சில காரணங்களால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், 19ம் தேதி 'கண்டிஷனல் அசைன்மென்டில்' இருந்த டீக்கடையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் கடைகள் அந்தரத்தில் தொங்கியது. கடந்த, 30ம் தேதியில் இருந்து சிறிது, சிறிதாக இடிந்து வந்ததால் இந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு காலி செய்ய வருவாய் துறையினர் 'நோட்டீஸ்' வழங்கி உத்தரவிட்டனர். இதன் பேரில், கடைகள் அகற்றும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'மற்ற இடங்களில் உள்ளதை போன்று, குன்னுாரில் தனியாக பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லை. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைத்தால் அனைவருக்கும் பயன் ஏற்படும்,' என்றனர்.குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ் குமார் கூறுகையில், ''கோர்ட உத்தரவின் பேரில் ஏற்கனவே கடைகள் அகற்ற உத்தர விடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மீண்டும் கடைகள் அமைக்க கூடாது. 'கண்டிஷனல் அசைன்மென்ட்' பெயரில் கடைகள் நடத்தியவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட மாட்டாது. இது போன்ற நிலை குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டால் மட்டுமே அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ