உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் இதமான காலநிலை படகு சவாரியில் ஆர்வம்

ஊட்டியில் இதமான காலநிலை படகு சவாரியில் ஆர்வம்

ஊட்டி:ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர்.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு சென்று, மலர்கள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்த பின்பு, படகு இல்லத்திற்கு சென்று, படகு சவாரி செய்ய தவறுவதில்லை.தற்போது, ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி, கடந்த, 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர்.குறிப்பாக, ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு, பெடல் மற்றும் மோட்டார் என, 100க்கும் மேற்பட்ட படகுகள் சவாரிக்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணிகள் கவுன்டர்களில் வரிசையில் காத்திருந்து, டிக்கெட் பெற்று, ஆர்வத்துடன் சவாரி செய்து வருகின்றனர். மலர் கண்காட்சியின், ஐந்தாவது நாளான நேற்று, நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், இதமான காலநிலையில் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்