உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சர்வதேச யோகா தினம் மழலையர் சூரிய நமஸ்காரம்

சர்வதேச யோகா தினம் மழலையர் சூரிய நமஸ்காரம்

குன்னுார்;குன்னுார் பாய்ஸ் கம்பெனி அருகே உள்ள ஆன்ஸ் கான்வென்ட் மற்றும் நர்சரி பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ரெவரெண்ட் சிஸ்டர் ஏஞ்சல் மேரி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் லின்ஸியா, சிந்துஜா யோகா பயிற்சி அளித்தனர். அதில், சூரிய நமஸ்காரம் உட்பட யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பள்ளி குழந்தைகள், 220 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ