உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடையூறான ஏ.டி.எம்., வேன்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

இடையூறான ஏ.டி.எம்., வேன்; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ஊட்டி : 'ஊட்டி பூங்கா மையப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஏ.டி.எம்., வேனை இடையூறின்றி நிறுத்த வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். ஊட்டியில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பூக்க துவங்கியுள்ளன. வெளிமாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் இதமான காலநிலையை அனுபவிக்க முன்கூட்டியே சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக வர துவங்கியுள்ளனர். வாரநாட்களில் நாள்தோறும், 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருகின்றனர். பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏ.டி.எம்., வசதியை பயன்படுத்தி கொள்ள கூட்டுறவு துறை சார்பில் வேனில் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஏ.டி.எம்., வேன், சுற்றுலா பயணியர் பூங்காவிலிருந்து வெளியே வரும் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இந்த வாகனத்தை பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஒதுக்குப்புறமாக நிறுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ