உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேவாலா வனச்சரகத்தில் 60,000 மரக்கன்றுகள் வனத்துறையிடம் பெற்று நடவு செய்ய அழைப்பு

தேவாலா வனச்சரகத்தில் 60,000 மரக்கன்றுகள் வனத்துறையிடம் பெற்று நடவு செய்ய அழைப்பு

பந்தலுார்:பந்தலுார் அருகே வனத்துறையின், 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.பந்தலுாரில் கிராம பகுதியில் மற்றும் தேயிலை தோட்டங்கள் அதனை ஒட்டி வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் கடந்த காலங்களில் அடர்த்தியாக காணப்பட்ட மரங்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் சாலை ஓரங்கள், குடியிருப்பு பகுதிகளில் வயது முதிர்ந்து விழும் நிலையில் காணப்படும் மரங்கள் ஆபத்தான மரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. மரங்களின் எண்ணிக்கை குறைவால், இயற்கை காலநிலை மாறி மழையின் அளவு வெகுவாக குறைந்து, கோடை காலங்களில் சமவெளிப் பகுதிகளை மிஞ்சும் அளவில் வறட்சி அதிகரித்து காணப்படுகிறது. அதில், இரண்டாவது சிரபுஞ்சி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் தேவாலா பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீரோடைகள் மற்றும் கிணறுகள் வற்றி, குடிநீர் கேட்டு போராடி பெரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் வரும் காலங்களில் மரங்களின் அடர்த்தியை அதிகரித்து, இயற்கையை பாதுகாத்து மண் வளம் மற்றும் மழை வளத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் பல்வேறு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக அலுவலகத்தை ஒட்டி, வனத்துறை மூலம் நர்சரி அமைக்கப்பட்டு மூங்கில், நெல்லி, ஈட்டி, செண்பகம், தேக்கு, பாதம், வேங்கை, மகாகனி, நாவல், நீர் நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 60 ஆயிரம் மரக்கன்றுகள் தற்போது நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள நிலையில், வனத்துறையினர் மூலம் வனப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறையினர் கூறுகையில்,'பொதுமக்கள் தங்கள் தோட்டங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய முன்வரும் நிலையில், நிலத்தின் ஆவணங்கள் குறித்த தகவல்களை வனத்துறையிடம் வழங்கி, இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்து இயற்கையை பாதுகாக்க முன் வர வேண்டும். இதன் மூலம் அழிந்து வரும் வனப்பகுதியை மீட்பதற்கான வழிவகை ஏற்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை