உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர அழைப்பு

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர அழைப்பு

கோவில்பாளையம் : கோவில்பாளையத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில், இலவசமாக சேர்ந்து தங்கி கல்வி கற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவில்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு தமிழ் வழியில், நான்காம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை கல்வி கற்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இலவசமாக தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது.விடுதியில் உள்ள மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. வாரத்துக்கு ஐந்து முட்டை, மாலை வேளையில், சுக்குமல்லி காபி, சுண்டல் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும், செலவுக்கு 100 ரூபாய் வழங்கப்படுகிறது. வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்கப்படுகிறது. விடுதியில் சேர விரும்புவோர், பள்ளி மாணவரின் கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி, வருமானச் சான்று, ஆதார் அட்டை மாணவர் பெயரில் வங்கி கணக்கு விபரம், ரேஷன் கார்டு என, அனைத்தும் இரண்டு செட் ஜெராக்ஸ் மற்றும் ஆறு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 96008 29396, 85259 83001 என்ற மொபைல் எண்களில் கோவில்பாளையம் விடுதிக்காப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை