மேலும் செய்திகள்
11 ஆண்டுகளுக்குப் பிறகு அறங்காவலர்கள் நியமனம்
13-Aug-2024
அன்னுார்;குமரன் குன்று கோவிலுக்கு அறிவிக்கப்பட்டு, 25 நாட்களாகியும், அறங்காவலர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வர். இக்கோவிலில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு கடந்த மாதம் 30ம் தேதி அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் வெளியிட்ட உத்தரவில், 'அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்,' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து கோவிலில் மகா மண்டபம் அமைத்தல், பார்க்கிங் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் துவங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அதிகாரிகள், இன்னும் அறங்காவலர்கள் பதவி ஏற்கவும், அறங்காவலர் குழுத் தலைவர் தேர்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அறநிலையத்துறை அறிவித்து 25 நாட்களாகியும், அறங்காவலர்கள் பதவி ஏற்க முடியாத நிலை நீடிக்கிறது.
13-Aug-2024