மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
21 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
21 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
22 hour(s) ago
கூடலுார் : கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம், விற்பனைக்கு வைக்கும் பலாப் பழங்களை, நள்ளிரவில் காட்டு யானைகள் துாக்கி செல்கின்றன.கூடலுாரில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால், அதனை தேடி காட்டு யானைகள் விவசாய தோட்டங்கள், குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், முதுமலையில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள காட்டு யானைகள், அகழியை கடந்து தொரப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களையும் பலாப் பழங்களையும் உணவாக்கி வருகின்றன.மேலும், மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி முதல் மார்த்தோமா நகர் வரை, இரவில் பலா பழங்களை தேடி யானைகள் வர துவங்கியுள்ளது.இதனால், ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, சாலை ஓரங்களில் பலாப்பழங்கள் விற்பனை செய்யவும், இரவில் இருப்பு வைத்து செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இந்நிலையில், வனத்துறையினர் சாலையோரம் ஆய்வு செய்த போது, சிலர் பலாப்பழங்களை இரவில சாலையோரம் வைத்து சென்றது தெரிய வந்தது. அன்று நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை, சாலையோரம் இருந்த பலாப்பழங்களை சுவைக்க துவங்கியது. யானையை பார்த்து ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'சாலையோரங்களில் பலாப்பழங்கள், விற்பனை செய்வதையும், இரவில் இருப்பு வைத்து செல்வதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்,' என்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago