மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
2 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
2 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
2 hour(s) ago
ஊட்டி;ஊட்டி அரசு கலை கல்லுாரியில் இளநிலை பாட வகுப்புகளுக்கான, முதல் பொது கலந்தாய்வு வரும், 10ம் தேதி நடக்கிறது.கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாட வகுப்புகளுக்கான, 18 துறைகளுக்கும் மாணவர் சேர்க்கையின் முதல் பொது கலந்தாய்வு, வரும், 10ம் தேதி நடக்கிறது. கலந்தாய்வில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமாக தகவல் கொடுக்கப்படும்.மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது, இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் ஒரு நகல் கொண்டு வர வேண்டும்.மேலம், பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் அசலுடன், 6 நகல்; மாற்று சான்றிதழ் அசலுடன், 6 நகல்; ஜாதி சான்றிதழ் அசலுடன், 6 நகல்; ஆதார் கார்டு அசலுடன், 6 நகல்; பாஸ்போர்ட் 6, ரேஷன் கார்டு முதல் பக்கம், 6 நகல்; வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்கம், 6 நகல் கொண்டுவர வேண்டும். தகுதி மதிப்பெண்
தமிழ் மற்றும் ஆங்கிலம் 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மற்ற பாடப்பிரிவுகள், 275 முதல் 400 (கட்ஆப்) வரை இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தவறாமல் காலை, 8:30 மணி முதல், 12:00 மணிக்குள் வர வேண்டும்.வெளியூர் மற்றும் தொலைவில் இருந்து வரும் மாணவர்கள், தங்களது சேர்க்கை உறுதி பெற்றவுடன், தாங்கள் தொலைவில் இருந்து வரும் விபரத்தினை தெரிவித்து, கல்வி கட்டணத்தை உடன் செலுத்தி கொள்ள வேண்டும். சேர்க்கை கட்டணம்
மாநில பாடத் திட்டத்திற்கு, 4500 ரூபாய்; இதர பாடத் திட்டத்திற்கு, 5000 ரூபாய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago