| ADDED : ஜூலை 16, 2024 01:28 AM
கோத்தகிரி;கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் காமராஜரின், 122 வது பிறந்தநாள் விழா, காங்., கட்சி சார்பில், சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, வட்டார தலைவர் சில்லபாபு தலைமையில், எம்.எல்.ஏ., கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, மிளிதேன் பள்ளியில் அறிவுத்திறன் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, கீழ்கோத்தகிரி வட்டாரத் தலைவர் மணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.