உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கொளப்பள்ளி பஜாருக்கு வந்த கட்டை கொம்பன் யானை

கொளப்பள்ளி பஜாருக்கு வந்த கட்டை கொம்பன் யானை

பந்தலூர்:பந்தலுார் அருகே கொளப்பள்ளி பஜாருக்கு கட்டை கொம்பன் மற்றும் புல்லட் ஆகிய யானைகள் 'விசிட்' செய்ததால் மக்கள் அச்சமடைந்தனர். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் மற்றும் புல்லட் என்று அழைக்கப்படும் இரண்டு ஆண் யானைகள் ஒன்றாக சுற்றி வருகின்றன. பகல் நேரங்களிலும் மக்கள் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உலா வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இரவு கொலப்பள்ளி பஜார் பகுதிக்கு, இரண்டு யானைகளும் விசிட் செய்தன. யானைகள் வருவதைபார்த்து பொதுமக்கள் சப்தம் எழுப்பி அவற்றை, அருகில் உள்ள விவசாய தோட்டங்கள் வழியாக சின்ன ஆணை பள்ளம் தேயிலை தோட்டத்தில் உள்ள சதுப்பு நில பகுதிக்குள் விரட்டினர். எனினும், இந்த இரண்டு யானைகளும் மாலை நேரத்தில், குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடும் என்பதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி