மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
17 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
17 hour(s) ago
ஊட்டி;ஊட்டி அருகே மந்தாட மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஊட்டி--குன்னுார் சாலையில் மந்தாடா பகுதி உள்ளது. இங்கு, நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து பொலிவுப்படுத்தி கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி, கடந்த மூன்று மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. நேற்று, கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. 9:00 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago