மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
ஊட்டி;குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக, ராட்சத மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மஞ்சூர் அருகே காட்டு குப்பையில், 1,800 கோடி ரூபாயில், 'நான்கு பிரிவில் தலா, 125 மெகாவாட்,' என, 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் நிலையத்திற்கான பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, 2,200 மீட்டருக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சுரங்க பாதைக்குள் கட்டுமான பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. மின் கோபுரம் பணி
குந்தா நீரேற்று திட்டப்பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம், கோவை, ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மையப்பகுதிகளில் உள்ள மின் பகிர்மானங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதற்காக, காட்டுகுப்பையிலிருந்து எமரால்டு, புது அட்டுபாயில், எடக்காடு, முக்கிமலை, கெத்தை, பில்லுார் ஆகிய பகுதிகளில் ராட்சத மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த, 2013ம் ஆண்டில் துவக்கப்பட்ட இப்பணி, 2017 டிச., மாதம் நிறைவு பெற்று, மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், நிர்வாக காரணங்களாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், 2023ம் ஆண்டு, நிறைவு பெற்றிருக்க வேண்டும். எனினும் தாமதமானதால், நடப்பாண்டு இறுதிக்குள் இரண்டு பிரிவுகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
18 hour(s) ago