உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியில் லாசி 2024 கருத்தரங்கு கலை மற்றும் அறிவியல் விவாதம்

பள்ளியில் லாசி 2024 கருத்தரங்கு கலை மற்றும் அறிவியல் விவாதம்

ஊட்டி:ஊட்டி குட்ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியில், 'லாசி 2024' என்ற தலைப்பில், கலை மற்றும் அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது.பள்ளியின் தலைவர் ஜேக்கப் தாமஸ் தலைமை வகித்தார். அதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 20 கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட, 150 பேர் பங்கேற்று, தாராளவாத கலை மற்றும் அறிவியல் பூர்வமான, பன்முக உலகத்தை குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தினர்.அதன் பின், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இந்த கருத்தரங்கம், பல்துறை மற்றும் சமூக அறிவியலின் குறிப்பிடத்தக்க பங்கை புரிந்து கொள்வதற்கான, ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. கல்வியாளர்களின் விவாதங்கள், விளக்கங்கள், முக்கிய உரைகள் கலை மற்றும் அறிவியல் உலகுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.இந்த நிகழ்வின் சிறப்பம்சம்மாக, கல்வி தடைகளை சமாளிப்பது; தாராளவாத கலை அறிவியல் குறித்த தவறான கருத்துக்கள், பதிவுகளை தகர்ப்பதாகும். இதில், இத்தகைய கல்வியின் தொழில்முறை மற்றும் வெற்றி கதைகளை, அதிநவீன ஆராய்ச்சி நுண்ணறிவுகள் மூலம், வெளிச்சம் போட்டு காட்டியது பெருமையாகும்.'லாசி 2024' கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு, கல்வியின் உலகளாவிய வாய்ப்புகளை ஆராயவும் ஊக்குவிக்கப்பட்டது. இத்தகைய வெற்றி நிகழ்வுகள் தொடரும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளியின் தாளாளர் டாக்டர் மாதவ் சரஸ்வத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ