உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் ஆணையம் சார்பில் சி விஜில் செயலி அறிமுகம்

தேர்தல் ஆணையம் சார்பில் சி விஜில் செயலி அறிமுகம்

ஊட்டி : எதிர்வரும் லோக்சபா பொது தேர்தல் சுதந்திரமாகவும்,நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தேர்தல் ஆணையத்தால், 'சி விஜில்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறியதாவது:இந்த செயலியை பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, அல்லது கூகுள் பிளே ஸ்டோர் செயலி வாயிலாகவோ பதிவிறக்கம் செய்து, தேர்தல் விதிமீறல் புகார்களை புகைப்ப டம் அல்லது வீடியோ வடிவில் பொது மக்கள் பதிவேற்றம் செய்யலாம்.இவ்வாறு அளிக்கும் புகார்கள், உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, 100 நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.புகார்கள் அளிக்கும் பொது மக்களின் ரகசியம் காக்கப்படும் வகையில், இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1800 425 2782 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்கலாம்.எனவே, தேர்தல் விதிமீறல் புகார்கள் இருப்பின், அச்சமின்றி மேற்கண்ட செயலி வாயிலாகவோ, அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி