உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சின்ன பிக்கட்டிக்கு வந்த சிறுத்தை; இரவில் மக்கள் நடமாட அச்சம்

சின்ன பிக்கட்டிக்கு வந்த சிறுத்தை; இரவில் மக்கள் நடமாட அச்சம்

குன்னுார்; குன்னுார் சின்ன பிக்கட்டி பகுதியில், இரவில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.குன்னுார்- -ஊட்டி சாலையில், சின்ன பிக்கட்டி பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.இங்கு, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால், இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்ல, மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த, 18ம் தேதி இரவு, சிறுத்தை நடந்து சென்றது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, வனத்துறையிடம் மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்ளூர் மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் இரவில் நேரங்களில் வனத்தில் இருந்து வரும் சிறுத்தைகள் சாலையில் உலா வருகின்றன. இதனால், இரவில் பணிக்கு சென்று வருபவர்கள் சாலையில் நடமாட முடியாமல் அச்சமடைகின்றனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து, சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை