உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாய்களை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள்

நாய்களை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள்

குன்னுார்:குன்னுாரில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வரும் சிறுத்தைகள் நாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.இந்நிலையில், வண்ணார பேட்டை, 'ஆப்பிள்-பி' பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வந்த சிறுத்தை, நாய் மற்றும் நான்கு குட்டிகளை வேட்டையாடியது. அதில், ஒரு நாயை கடித்து குதறி அதே இடத்தில் விட்டு சென்றது.இதே போல, அருவங்காடு பாலாஜி நகர் பகுதியில் இரவில் வந்த சிறுத்தை, கண்ணன் என்பவர் வளர்த்து வந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றுள்ளது. வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை