உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மதுபான கடைகள் 4ம் தேதி மூடப்படும்

மதுபான கடைகள் 4ம் தேதி மூடப்படும்

ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் வரும், 4ம் தேதி 'டாஸ்மாக்' உட்பட, அனைத்து மதுபான கடைகள் மூடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், ஆகியவற்றில் லோக்சபா தேர்தல் எண்ணிக்கை முன்னிட்டு, வரும், 4ம் தேதியன்று, எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது.குறிப்பிட்ட நாளில் கட்டாயம் 'டாஸ்மாக்' சில்லறை விற்பனை கடைகள், கிளப்கள் மற்றும் ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.உத்தரவை மீறி, மது விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமைதாரர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ