உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிடப்பில் பஸ் ஸ்டாண்ட்: விரிவுபடுத்தும் பணி உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

கிடப்பில் பஸ் ஸ்டாண்ட்: விரிவுபடுத்தும் பணி உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

கூடலுார்;கூடலுாரில் திறக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனையை பிப்., 25ம் தேதி, திறக்கப்பட்டது. அப்போது, பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பணிமனையை, புதிய பணிமனைக்கு மாற்றாமல், பணிகள் முழுமை பெறாமல், பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.அதிகாரிகள் கூறுகையில்,'பணிமனை பஸ் ஸ்டாண்டின் பின்பகுதியில் மாற்றப்பட்டு, அப்பகுதி பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்தும் பணி உடனடியாக நடைபெறும்,' என்றனர். தொடர்ந்து, பஸ்களை பராமரிக்கும் பணிமனை கீழ் பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், பணிமனை பகுதியை பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால், இட பற்றாக்குறை ஏற்பட்டு, பஸ்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. தற்போது, பருவமழை துவங்கியுள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மழைநீர் வழிந்தோட வழியின்றி தேங்குவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாக வருகின்றனர்.பயணிகள் கூறுகையில், 'கூடலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியாமல் அவசர கதியில் திறக்கப்பட்டது. நிலுவையில் உள்ள, விரிவு படுத்தும் பணிகளை துவங்கி முடிக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் காரணமாக, அப்பகுதியில் சீரமைக்க டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, டெண்டர் விட்டு, விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை