உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி 10ம் தேதி முதல் பணி துவக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி 10ம் தேதி முதல் பணி துவக்கம்

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் வரும், 10 ம் தேதி முதல், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவங்குகிறது.கால்நடைகளை நோயின்றி பேணிக்காப்பது, கால்நடை வளர்ப்போரின் முக்கிய கடமை. மாடுகளுக்கு ஏற்படும் வியாதிகளில் கோமாரி நோய் தாக்குவது கொடியது.நீலகிரி மாவட்டத்தில், 28 ஆயிரத்து 200 பசு மற்றும் எருமை இனங்களை நோயிலிருந்து காக்கும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, 10ம் தேதி முதல் நடக்க உள்ளது.மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம், ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு, 29 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு எந்த நாளில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விபரத்தினை, முன்கூட்டியே சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால், அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும்.பொதுமக்களும் கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை கிளை நிலையங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.எனவே, கோமாரி நோய் தடுப்பூசி போடும் நாளில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி