உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வறட்சியில் கெத்தை வனப்பகுதி தீ பரவாமல் இருக்க கண்காணிப்பு

வறட்சியில் கெத்தை வனப்பகுதி தீ பரவாமல் இருக்க கண்காணிப்பு

ஊட்டி:மஞ்சூர் கெத்தை வனப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட கெத்தை வனப்பகுதி பல ஏக்கர் கொண்டதாகும். இங்கு பல்வேறு வகையான மரங்கள், மூலிகை செடிகள் உள்ளன. வனப்பகுதிக்கு இடையே கெத்தை மின்நிலையம், ராட்சத தண்ணீர் குழாய் செல்லும் பகுதி உள்ளது. தவிர, கெத்தை, பெரும்பள்ளம், எல்.ஜி.பி., பகுதிகளில் யானைகளுக்கான குடிநீர் வசதி இருப்பதால் யானைகள் அங்கு தங்கி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தற்போது கடும் வறட்சியால் கெத்தை வனத்தில் தீ பரவாமல் தடுக்க வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடும் வறட்சியால் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுவதுடன், நீரோடைகள் வற்றியுள்ளது. இச்சாலையில், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் வாகனங்களில் வருபவர்களால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சமூக விரோத செயலில் ஈடுபடும் போது வனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கெத்தையிலிருந்து பெரும்பள்ளம் வனப்பகுதி வரை ரேஞ்சர் தலைமையில் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி