மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்
6 hour(s) ago
கோத்தகிரியில் பெய்த மழை ஈரம் கண்ட விவசாய நிலங்கள்
6 hour(s) ago
கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய வன குழுவினர்
6 hour(s) ago
ஊட்டி:ஊட்டி புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பசுமைப்படை சார்பில், பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் பெரியநாயகம் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் பருவ மழை காலங்களை பயனுள்ளதாக பயன்படுத்தப்பட வேண்டும். இயற்கை தாவர வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளவும், பழ மரங்கள், மூலிகைத் தோட்டம், வீட்டு தோட்டத்தில் இயற்கை விவசாயம் உட்பட, இயற்கை பணிகள் தொடங்க சிறந்த காலமாகும். மழைக்காலத்தை பயனுள்ளதாக மாற்ற, மாணவர்கள் மழைநீர் சேமிப்பு போன்ற சிறப்பு பணிகைளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: இந்திய புவியியல் ஆய்வு மையம், தேசிய அளவில் நீலகிரி மாவட்டம், டார்ஜிலிங் பகுதிகளில் மண் சரிவு, காலநிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.புள்ளி விபரங்கைளை சேகரித்து, பல்வேறு தகவல் அடிப்படையில், ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து, பொது மக்கள் அறிந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தி வருகின்றது.மழைக்காலங்களில் அரசுக்கு உதவும் வகையில், மாணவர்கள் தகவல்களை பங்களிப்பதன் மூலம், அசம்பாவிதங்களை தடுக்க முடியும். அரசு எடுக்கும் துரித நடவடிக்கைகளுக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியம்.மேலும், சமூக வலை தளத்தில் மக்களை அச்சுறுத்தும் தவறான தகவல்களை அளிக்காமல், சரியான அறிவுபூர்வமான தகவல்களை மாணவர்கள் அளிக்க வேண்டும்.வசிப்பிடங்களில் கால்வாய்களில் மண், கல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அடைக்கப்பட்டு இருப்பின், அவற்றை உடனடியாக துார்வார பொதுமக்கள் தாங்களே ஈடுபடுவதுடன், நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மரங்களின் அடியில் வாகனங்கள் நிறுத்துவைதை தவிர்க்க, அதன் பாதிப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தேசிய பசுமைபடை செய்திருந்தது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago