உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இன்னும் அதிகமாக பறிமுதல் செய்ய வேண்டும்

இன்னும் அதிகமாக பறிமுதல் செய்ய வேண்டும்

மேட்டுப்பாளையம்;இன்னும் அதிகமாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று நீலகிரி லோக்சபா தொகுதியின், தேர்தல் செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா கூறினார்.மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நீலகிரி லோக்சபா தொகுதியின், தேர்தல் செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ டீம், வீடியோ கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான அறிவுரையை தேர்தல் செலவின மேற்பார்வையாளர் வழங்கினார்.பின் செய்தியாளர்களிடம் சந்தீப் குமார் மிஸ்ரா கூறியதாவது: தேர்தல் பணிகளில் சிரமம் உள்ளதா என கேட்டறிந்தேன். ஒவ்வொரு டீம்களுக்கும் அவர்கள் பணிகளின் முக்கியத்துவம் தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது. அதிக அளவிலான பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலையான கண்காணிப்பு குழு எந்த வாகனத்தையும் நிறுத்தி பரிசோதனை செய்யலாம். 50 ஆயிரம் மற்றும் அதற்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களுக்கு ஆவணம் இல்லை என்றால் அவை பறிமுதல் செய்ய வேண்டும். அரசியல் கட்சியினர் கூட்டங்களை வீடியோ டீம் பதிவு செய்து அதை வீடியோ கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் பகுதியில் அனைத்து அதிகாரிகளின் தேர்தல் பணிகள் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை