மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
4 minutes ago
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
4 minutes ago
கோத்தகிரி:கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில்மேடு அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர்திருக்கோவில், 68ம் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த, 22ம் தேதி காலை, 9:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முக்கிய திருவிழா நாளான, 29ம் தேதி காலை,11:00 மணிக்கு, கங்கையில்இருந்து, ஐயனின் கரக ஊர்வலம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு, அய்யனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, கண்கவர் வாண வேடிக்கை இடம்பெற்றது. அதில், பில்லிகம்பை கோவில் மேடு, ஒன்னதலை உட்பட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் ஒரு நிகழ்வாக, நேற்று காலை, 10:00 மணிக்கு, பொங்கல் பூஜை, பகல், 12:00 மணிக்கு, சிறப்பு பூஜை தொடர்ந்து, தாரை தப்பட்ட கச்சேரி நடந்தது.இன்று சிறுவர்களுக்கான போட்டிகள் நடைபெறும். வரும், 6ம் தேதி, மறு பூஜையுடன், விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் மேடு ஊர் பொதுமக்கள், ஸ்ரீ முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
4 minutes ago
4 minutes ago