மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் பலியான நிலையில், ஒருவரிடம் உடலை தேடும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால், பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் பிதர்காடு சந்தக்குன்னு என்ற இடத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் குணசேகரன்,-18, மற்றும் பதினெட்டுகுன்னு என்ற இடத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் கவியரசன்,17, உட்பட சிலர் பாலாவயல் என்ற இடத்தில், ஆற்றில் மீன் பிடிக்க சென்று உள்ளனர்அப்போது, ஆற்றில் வெள்ளம் நிறைந்து காணப்படும் நிலையில் எதிர்பாராத நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குணசேகரன் மற்றும் கவியரசன் இருவரும் தண்ணீர் சுழலில் சிக்கி உள்ளனர். அதில், உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய குணசேகரன் உடலை மீட்கப்பட்டது. கவியரசன் உடலை நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கிடைக்காத நிலையில், குணசேகரன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கவியரசன் உடலை இரண்டாவது நாளாக நேற்று காலை கூடலுார் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். மறுபுறம், வயநாட்டில் முகாமிட்டிருந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அரக்கோணம் பிரிவு நாலாவது பட்டாலியனை சேர்ந்த, 30 வீரர்கள் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு வரை சிறுவனின் உடல் கிடைக்கவில்லை.இந்நிலையில், உயிரிழந்த குணசேகரன் உடலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி. ராஜா மாவட்ட கலெக்டர் லஷ்மி பவ்யா தண்ணீரு, தி.மு.க மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 'முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய்; தி.மு.க., கட்சி நிதியிலிருந்து ஒரு லட்சம்,' என, 4 லட்சம் ரூபாய் நிதி உதவி சிறுவனின் பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025