| ADDED : ஜூலை 08, 2024 02:17 AM
மேட்டுப்பாளையம், ஜூலை 8--மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் அந்நியர் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.மேட்டுப்பாளையம் --- கோத்தகிரி சாலையில் மலைப்பாதை தடுப்புச்சுவரில், இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ள காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிட்கள் நடமாட்டம் உள்ளதா என, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய வனப்பகுதிகளில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதி முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் உள்ள பகுதிகளில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டு, சல்லடை சோதனை செய்து வருகிறோம். மலை கிராம மக்களிடம், அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் தெரியப்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.---