கூடலுார்;முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில் புதிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, வாகன சோதனை ஓட்டம் நடந்தது.முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில், சேதமடைந்த பழைய பாலங்களை அகற்றி, புதிய பாலம் அமைக்க, 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.தொடர்ந்து, பழைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்ட வசதியாக, கடந்த ஆண்டு ஏப்., மாதம், அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து சோதனை முறையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து, பெய்த மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் தற்காலிக பாலம் சேதமடைந்தது. பழைய பாலத்தில் வாகனங்கள் தொடர்ந்து இயக்கினர். தற்காலிக பாலங்கள் சீரமைக்கப்பட்டு அக்., அதில், வாகன போக்குவரத்து துவங்கப்பட்டது.தொடர்ந்து, பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பருவமழையின் காரணமாக பணிகள் தாமதமானது. பருவமழை நிறைவடைந்து தொடர்ந்து மீண்டும் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது புதிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெற்று, அதில், சோதனை முறையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'புதிய பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, அவ்வப்போது சோதனை முறையில் வாகனங்களை இயக்கி வருகிறோம். அடுத்த வாரம் முதல், புதிய பாலங்கள் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்,' என்றனர்.