உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் வசதி இல்லை; பழங்குடியின மாணவியர் அவதி கல்லூரி செல்ல பஸ் வசதி இல்லை பழங்குடியின மாணவியர் அவதி

பஸ் வசதி இல்லை; பழங்குடியின மாணவியர் அவதி கல்லூரி செல்ல பஸ் வசதி இல்லை பழங்குடியின மாணவியர் அவதி

பெ.நா.பாளையம், - காலை நேரத்தில் ஆனைகட்டியில் இருந்து கோவையில் உள்ள கல்லூரி செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பழங்குடியின மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைகட்டியில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்து ஆனைகட்டி, தடாகம் வழியாக கோவை சென்றடையும். மீண்டும் கோவையிலிருந்து தடாகம் வழியாக ஆனைகட்டி வரும். ஆனைகட்டியில் இருந்து தினமும் காலை, 6:00 மணிக்கு புறப்படும் தனியார் பஸ்ஸில் ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாணவியர் கல்லூரி சென்று வந்தனர். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த தனியார் பஸ், தற்போது கோவையிலிருந்து தடாகம் வரை வந்து, ஆனைகட்டி செல்லாமல், பின்னர் மீண்டும் கோவை திரும்பி சென்று விடுகிறது. இதனால் ஆனைகட்டியிலிருந்து கோவையில் உள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டிய பழங்குடியின மாணவ, மாணவியர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.ஆனைகட்டியிலிருந்து கோவைக்கு காலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் தனியார் பேருந்தை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி