உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயில் பணிமனையில் ஓணம் திருவிழா

மலை ரயில் பணிமனையில் ஓணம் திருவிழா

குன்னுார் : குன்னுார் மலை ரயில் பணிமனையில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது.குன்னுார் ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் ஓணம் திருவிழா சுற்றுலா பயணிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு காரணமாக கேரளாவின் பல இடங்களிலும் ஓணம் திருவிழா எளிமையாக கொண்டாடப்படும் நிலையில், குன்னுார் மலை ரயில் நிலைய பணிமனையிலும் ஓணம் திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.பணிமனை வளாகத்தில், ரயில்வே ஊழியர்கள் பூக்கோலமிட்டு மாவேலியை வரவேற்கும் விதமாக விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஆண்டுதோறும் ஓண சத்யா விருந்துடன் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தற்போது பாயசம் மட்டுமே வழங்கி எளிமையாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை