உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழனிசாமி வாகனம்; பறக்கும் படை சோதனை

பழனிசாமி வாகனம்; பறக்கும் படை சோதனை

கோவை : தேர்தல் பறக்கும் படையினர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் காரை சோதனை செய்தனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பணம், பரிசுப்பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க தேர்தல்பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசாரத்துக்காக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும்போது, காட்டேரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் ஒன்றும் கிடைக்காததால் அவரது வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ