மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
9 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
9 hour(s) ago
குன்னுார்:குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில் போலீசார் வைத்துள்ள அறிவிப்பு பலகை பாதசாரிகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது.குன்னுாரில் முக்கிய நுழைவாயில் பகுதியாக 'லெவல் கிராசிங்' உள்ளது. மலை ரயில் பாதை அருகிலேயே மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் போக்குவரத்து போலீசார் அறை உள்ளது. நான்கு ரோடுகள் சந்திக்கும் இந்த இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது.இங்கு தற்போது போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு வழிப்பாதைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வாக பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால், இவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்படுகிறது. வளைவான இந்தப் பகுதியில் வரும் வாகனங்களிலும் மக்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.சமூக ஆர்வலர் பாஸ்கரன் கூறுகையில்,''மிகவும் குறுகலான இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில் இங்கு பைக்குகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டும் யாரும் பின்பற்றுவதில்லை.இந்நிலையில், தற்போது மீண்டும் இதன் அருகில் பொதுமக்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை மிகவும் தாழ்வாக வைத்துள்ளனர். பாதிப்புகள் ஏற்படும் முன் இதனை அகற்றுவதுடன் இங்கு போலீசாரின் பைக்குகள் நிறுத் தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago