மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
17-Oct-2025
கால்பந்து போட்டி வெற்றி அணிக்கு கோப்பை
17-Oct-2025
தேயிலை ஏலத்தில் ரூ.36.14 கோடி வருவாய்
17-Oct-2025
ஊட்டி: 'ஊட்டி அருகே கல்லட்டி சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருப்பதால், விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி, -கல்லட்டி சாலை, 36 கொண்டை ஊசி வளைவு கொண்டதாகும். 'செங்குத்தான இச்சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட கியரில் செல்ல வேண்டும்,' என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விபத்தை தடுக்க வளைவுகளில் ஆங்காங்கே நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வெளி மாவட்டம், வெளி மாநில வாகன ஓட்டிகள் இச்சாலையில் வாகனங்களை இயக்க போதிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த காலங்களில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியது. விபத்தால் உயிர் பலி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா வாகனங்கள் இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, இச்சாலையில் உள்ளூர் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியது உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து போலீசார் தலைக்குந்தா மையபகுதி மற்றும் தலை குந்தா - கல்லட்டி இடையே குறுக்கு சாலைகளில் விதிமீறி செல்லும் வாகனங்களை கண்காணித்து தடுக்க வேண்டும். குறிப்பாக, உள்ளூர் மக்களின் ஆதரவுடன் சுற்றுலா வாகனங்கள் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊட்டி போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும்.எஸ்.பி., சுந்தரவடிவேல் கூறுகையில், ''ஊட்டி கல்லட்டி சாலையில் விபத்து அபாயத்தை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில் சாலையில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.
17-Oct-2025
17-Oct-2025
17-Oct-2025