உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைப்பாதையில் குழாய்: தடுக்கி விழும் மக்கள்

நடைப்பாதையில் குழாய்: தடுக்கி விழும் மக்கள்

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜார் நடைபாதையில் தண்ணீர் குழாய்கள் குறுக்கே பொருத்தப்பட்டுள்ளதால், தடுக்கி விழுந்து மக்கள் காயமடைந்து வருகின்றனர்.கோத்தகிரி கட்டபெட்டு பஜார், ஊட்டி பிரதான சாலையில் இருந்து, பஸ் நிறுத்தம் இடையே நடைபாதை அமைந்துள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு கட்டடங்களால், நடைபாதை சுருங்கியுள்ளதுடன், படிகளும் இடிந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.தவிர, தண்ணீர் குழாய்கள் நடைபாதையில் உயரமாக குறுக்கே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், துருப்பிடித்த குழாய்களில் தண்ணீர் கசிவதால், நடந்து செல்வோர் தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், குழாய்களை முறையாக பொருத்தி, தண்ணீர் கசிவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை