உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கொடிசியா தொழிற்பூங்காவில் 1,250 மரக்கன்றுகள் நடவு

கொடிசியா தொழிற்பூங்காவில் 1,250 மரக்கன்றுகள் நடவு

கருமத்தம்பட்டி : உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கொடிசியா தொழில் பூங்கா வளாகத்தில், ஆயிரத்து, 250 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.மோப்பிரிபாளையம் பேரூராட்சி, நாரணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொடிசியா தொழில் பூங்கா உள்ளது. இந்த தொழில் பூங்கா மற்றும் அக்வா புளோ பவுண்டரி சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோவை மண்டல அதிகாரி செந்தில் விநாயகம், மாவட்ட அதிகாரிகள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன் மற்றும் கொடிசியா கவுரவ செயலாளர் சசிக்குமார் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஆயிரத்து, 250 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடவு செய்யப்பட்டன. நாரணாபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் கொடிசியா அலுவலக பொறுப்பாளர்கள், பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை