| ADDED : மே 28, 2024 12:15 AM
கோத்தகிரி:கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் 'கேரிபேக்' உட்பட, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கும் தடை உள்ளது. இந்த தடை உத்தரவை மீறி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினாலும், புழக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரின் அறிவுறுத்தல் படி, கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடந்தது. அதில், இரண்டு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு, 5,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டனர்.