மேலும் செய்திகள்
போதை ஒழிப்புவிழிப்புணர்வு பேரணி
14-Feb-2025
குன்னுார் : பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வர, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், வரும் ஜூன், 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதனையொட்டி, அனைத்து துறைகள், நிறுவனங்களும், 'பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லுங்கள்,' என்ற கருப்பொருளின் கீழ், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதன்படி, 'குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், நீர்நிலைகளை அகலப்படுத்தி பாதுகாப்பது; பிளாஸ்டிக் இல்லாத விழிப்புணர்வு ஏற்படுத்துவது ; மரங்கள் நடவு செய்தல்,'என, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஜுன்,5ம் தேதி வரை நடத்தப்படுகிறது.நேற்று வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை கன்டோன்மென்ட் பள்ளி வளாகத்தில் துவங்கிய, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்த மாணவ, மாணவியர், பிளாஸ்டிக் ஒழிப்போம் என்பன உட்பட பல்வேறு வாசகங்களை கோஷமிட்டவாறு வந்தனர்.எம்.ஆர்.சி., பேரக்ஸ் வழியாக வந்த பேரணி ராணுவ மருத்துவமனை பகுதியில் நிறைவு பெற்றது. அங்கு, வாரிய சுகாதார அதிகாரி ராதாகிருஷ்ணன், ஜே.சி.ஐ., தலைவர் விஜயகாந்த், கிளீன் குன்னூர் செயலாளர் வசந்தன் ஆகியோர் பிளாஸ்டிக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்து பேசினர்.கன்டோன்மென்ட் வாரிய பொறியாளர் சுரேஷ், நியமன உறுப்பினர் ஸ்ரீபா, முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Feb-2025