உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எல்லை சோதனை சாவடியில் சோதனைக்கு பின் அனுமதி

எல்லை சோதனை சாவடியில் சோதனைக்கு பின் அனுமதி

பந்தலுார்;கேரளா மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகை, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு கேரளா மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அதிகாலை, 5:00 மணி முதல் கேரளா மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் இருந்து, அதிக அளவில் வாகனங்கள் முதுமலை மற்றும் ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்றது. தற்போது, தேர்தல் காலம் என்பதாலும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் வாகனங்கள் வந்ததாலும், மாநில எல்லை சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களும் முழுமையான பரிசோதனைக்கு பின்னர் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டது. அதில், பெரும்பாலான வாகனங்களில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் மற்றும் பான் மசாலா பொருட்கள், மது பாட்டில்களுடன் பயணித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்து விடுவித்தனர். அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் குறுகிய சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ