உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் பகுதியில் மரம் விழுந்து மின் சப்ளை பாதிப்பு

கூடலுார் பகுதியில் மரம் விழுந்து மின் சப்ளை பாதிப்பு

கூடலுார்;கூடலூர், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தபால் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரம் விழுந்து, மின்கம்பம் சேதம் அடைந்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.கூடலுார் பழைய கோர்ட் சாலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு பி.எஸ்.என்.எல்., அலுவலகம் பின்புறம் சாலையில் விழுந்தது. அதில், சுற்றுச்சுவர் சேதம் அடைந்தவுடன், மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்கம்பமும் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது.தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி மரத்தின் கிளைகளை அகற்றினர்; போக்குவரத்து சீரானது. மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்ன ஊழியர்கள் ஈடுபட்டனர். சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை