உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வள்ளி கும்மியாட்டம் பயிற்சி

வள்ளி கும்மியாட்டம் பயிற்சி

அன்னுார்:அன்னுாரில், கோவை ரோட்டில், கேஜி.வளாகத்தில், வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், வள்ளி கும்மியாட்டம் மற்றும் கம்பத்தாட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. 120 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில், லண்டன் பார்க்லேன் அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளா கவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு, கலைக்குழு ஆசிரியர் பழனிச்சாமி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.ஆசிரியை மஞ்சுளா பேசுகையில், குழந்தைகளை மொபைல் மோகத்திலிருந்து விடுவித்து, நூலகத்தையும், நூல்களையும் அறிமுகப்படுத்துங்கள். ஒரே வருடத்தில், அவர்களுடைய சிந்திக்கும் திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை