மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சியில், குடிநீர் திறக்கும் பணியில், 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில், தண்ணீர் சேமிப்பு தொட்டிக்கு தண்ணீர் செல்வதற்காக, மோட்டார் போடுவது மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் திறந்து விடுவது, குடிநீர் கிணறு மற்றும் தொட்டிகளை சுற்றி சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு மாதந்தோறும், 600 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் குறைவான ஊதியத்தில், 30 நாட்களும் வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு கடந்த, 4- மாதங்களாக, சம்பளம் வழங்காமல் உள்ளதால், நாள்தோறும் பணிக்கு வரும் வாகன செலவு கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, குடிநீர் பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025