உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெயின்ட் தொழிலில் நவீன தொழில்நுட்ப மேம்பாடு இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்க கருத்தரங்கில் முடிவு

பெயின்ட் தொழிலில் நவீன தொழில்நுட்ப மேம்பாடு இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்க கருத்தரங்கில் முடிவு

ஊட்டி:'ஊட்டியில் நடந்த கருத்தரங்கில், 'பெயின்ட்' தொழிலில் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்ப மேம்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன,' என, தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில், இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர் சங்க, தமிழ்நாடு மண்டலத்தின் இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது.சங்கத்தின், தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாபு தியாகராஜன் வரவேற்றார். முன்னாள் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், 'தரமான மூலபொருட்களின் முக்கியத்துவம்; வர்ணம் தயாரிப்பில் மேற்கொள்ள வேண்டி நவீன தொழில்நுட்பம்; நுகர்வோருக்கு விற்பனை செய்வதில் பின்பற்ற வேண்டிய நுணுக்கம்; டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு,' உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சங்க நிர்வாகிகள் பேசினர்.சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு தியாகராஜன் கூறுகையில், ''இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்கம் நம் நாட்டில், 11 மண்டலங்களாக உள்ளன. தமிழ்நாடு மண்டலத்தின் சார்பில், இரு நாள் கருத்தரங்கு ஊட்டியில் நடந்தது. அதில், அகில இந்திய தலைவர் விஜய்டட்லி, துணைத் தலைவர் தினேஷ் பிரபு மற்றும் உலகின் ஆறு நாடுகளில் இருந்து பெயின்ட் தொழிற்சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில், 'பெயின்ட்' தொழிலில் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்ப மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நடந்தது. அதனை பற்றிய கூடுதல் தகவல்கள் குறித்து, வல்லுனர்களுடன் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன,'' என்றார்.தமிழ்நாடு மண்டல தலைவர் மோகன்ராஜ், துணை தலைவர் கார்த்தி கேயன், பொருளாளர் விக்னேஷ், செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 300 அங்கத்தினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை