பஸ்சுக்குள் பெய்யும் மழை; மலையில் பயணிகள் பரிதவிப்பு
குன்னுார்;குன்னுார், ஊட்டி காட்டேரி பகுதிகளுக்கு சென்ற பஸ்களில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.குன்னுார் - ஊட்டி இடையே இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது. அந்த பஸ்களில் கூரை பெயர்ந்து மழை வெள்ளம் உள்ளே வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கனமழை பெய்த நிலையில், ஊட்டியில் இருந்து குன்னுார் வந்த, அரசு பஸ்சிற்குள், பல இடங்களிலும் மழை நீர் ஒழுகி, இருக்கைகள் முழுவதும் நனைந்தன.இதனால், பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர். இதேபோல காட்டேரி சென்ற அரசு பஸ்சிற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் குடை பிடித்து பயணம் மேற்கொண்டனர்.